Toronto Bike Lanes அகற்றப்படுகிறதா? Ford அரசுக்கு முக்கிய நீதிமன்ற வெற்றி!

Toronto நகரின் முக்கிய வீதிகளில் உள்ள Bike Lanes-ஐ அகற்றுவதற்கான Ford அரசின் திட்டத்திற்கு இருந்த முக்கிய சட்டத் தடை தற்போது நீங்கியுள்ளது.

Ontario Court of Appeal, மாகாண அரசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்து, Bike Lanes-ஐ அகற்றுவது அரசியலமைப்புக்கு முரணானது என்று முன்னர் வழங்கப்பட்ட கீழ்நீதிமன்றத் தீர்ப்பை மாற்றியுள்ளது.

Doug Ford தலைமையிலான Ontario அரசு, Toronto-வின் Bloor Street, Yonge Street, University Avenue ஆகிய முக்கிய வீதிகளில் அமைந்துள்ள சுமார் 19 முதல் 20 கிலோமீட்டர் வரையான பாதுகாக்கப்பட்ட Bike Lanes-ஐ அகற்ற திட்டமிட்டிருந்தது. Bike Lanes காரணமாக வாகன நெரிசல் அதிகரிப்பதாக Ford அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

ஆனால் Cycling advocacy அமைப்புகள் இந்தத் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடின. 2025 ஜூலையில் Superior Court வழங்கிய தீர்ப்பில், Bike Lanes-ஐ அகற்றுவது சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்றும், அது உரிமைகளை மீறுவதாகவும் கூறப்பட்டிருந்தது.

தற்போது அந்தத் தீர்ப்பை மாற்றியுள்ள Ontario Court of Appeal, Bike Lanes என்பது உறுதி செய்யப்பட்ட அரசியலமைப்பு உரிமை அல்ல என்றும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அவற்றை அகற்றுவதற்கான சட்டரீதியான பாதை Ontario அரசுக்கு மீண்டும் திறந்துள்ளது.

Cycling advocacy அமைப்புகள், Bike Lanes அகற்றப்படுவது சைக்கிள் பயணிகளின் பாதுகாப்பை பாதிக்கும் என்று தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.

Related Articles

Latest Articles