வீடு வாங்குவதற்கான செலவு மட்டுமல்ல… அந்த வீட்டை Insurance செய்வதற்கான செலவும் Ontario-வில் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக வெள்ளம், கனமழை மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகளில் ஏற்படும் sewer backup போன்ற அபாயங்கள் அதிகமுள்ள பகுதிகளில், Home Insurance கட்டணங்கள் உயர்ந்து வருவதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
Rates.ca-வின் 2026 தரவுகளின்படி, Ontario-வில் வீட்டு Insurance கட்டணங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சராசரியாக 6.2 சதவீதம் அதிகரித்துள்ளன. மாகாணத்தின் சராசரி வருடாந்த Home Insurance கட்டணம் தற்போது சுமார் $2,235 ஆக உள்ளது.
Toronto-வில் சராசரி Home Insurance கட்டணம் ஆண்டுக்கு $2,296. ஆனால் நீங்கள் எந்த பகுதியில் வசிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இந்தத் தொகை கணிசமாக மாறுகிறது. சில இடங்களில் premiums ஓராண்டில் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
இதற்கு வெள்ளம் மட்டும் காரணமல்ல. கனமழை, புயல் மற்றும் காற்றினால் ஏற்படும் சேதம், பழமையான sewer infrastructure, வீட்டை மீண்டும் கட்டுவதற்கான அதிகரித்த செலவு ஆகியவையும் Insurance கட்டணத்தை நிர்ணயிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. Rates.ca தரவுகளின்படி Ontario நகரங்களில் 82 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களில் 2026-ல் premiums அதிகரித்துள்ளன.










