Calgary நகரில் உள்ள Saddletowne Circle பகுதியில் வியாழக்கிழமை பிற்பகலில் இரண்டு Calgary Transit பேருந்துகள் உட்பட 8 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த குறைந்தது 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஆபத்தான நிலையில் உள்ள ஒருவரும், பேருந்து ஓட்டுநர் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.
விபத்துக்குள்ளான பேருந்து திரவ இயற்கை எரிவாயுவில் (Liquid Natural Gas) இயங்கியதால், பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பேருந்தின் மீது தீப்பிழம்புகள் வெடித்துச் சிதறியதாக தீயணைப்புத் துறைத் தலைவர் Steve Dongworth தெரிவித்துள்ளார்.
இந்த கோர விபத்து குறித்து Calgary Police அதிகாரிகள் Sgt. Andy Woodward தலைமையில் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, அப்பகுதிக்கான சாலைப் போக்குவரத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.










