Calgary காவல்துறையினர் நடத்திய 4 மாத கால தீவிர போதைப்பொருள் கடத்தல் தடுப்பு விசாரணையின் மூலம், வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான $6.8 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Calgary மற்றும் Edmonton பகுதிகளில் செயல்பட்டு வந்த இந்த கடத்தல் வலையமைப்பைக் குறிவைத்து நடத்தப்பட்ட சோதனையில், 40 கிலோவுக்கும் அதிகமான கொக்கெய்ன், ஃபென்டானில், மெத்தபெட்டமைன் மற்றும் சுமார் 3 லட்சம் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
மேலும், ரொக்கமாக $2 மில்லியனுக்கும் அதிகமான பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக கொலம்பியாவிலிருந்து இவை கடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய Tomas Bahta, Mohammed Ibrahim, Fozee Ibrahim மற்றும் Aidan Saunders ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
