British Columbia மாகாணத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற ஒரே நேரடித் தலைவர்கள் விவாதத்தில், B.C. NDP தலைவர் David Eby, B.C. Conservative தலைவர் Lorne Doerkson மற்றும் B.C. Green Party தலைவர் Emily Lowan ஆகியோர் பங்கேற்று மோதிக் கொண்டனர்.
அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற இந்த விவாதத்தில், வீட்டுவசதி நெருக்கடி, பொருளாதார நிலைமை, ICBC காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் பழங்குடியினரின் உரிமைகள் சட்டம் (DRIPA) உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
9 ஆண்டுகால NDP ஆட்சியின் சாதனைகளை நியாயப்படுத்திப் பேசிய David Eby, பழைய அரசுகளின் குறைகளைச் சுட்டிக்காட்டியதோடு, அமெரிக்க அதிபர் Donald Trump-ன் அச்சுறுத்தல்களிலிருந்து கனடாவைப் பாதுகாக்க வலுவான ஆணை தேவை எனத் தெரிவித்தார்.
அதேவேளை, NDP ஆட்சியின்கீழ் மாகாணத்தில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என விமர்சித்த Lorne Doerkson, புதிய மாற்றத்திற்கான நேரமிது என்றார்.
Green Party தலைவர் Emily Lowan, இரு பெரிய கட்சிகளும் பழைய திட்டங்களையே மீண்டும் முன்வைப்பதாகக் குற்றம்சாட்டி, சிறுபான்மை அரசு அமைந்தால் தமது கட்சி தீர்க்கமான சக்தியாக விளங்கும் எனக் குறிப்பிட்டார்.










