அல்பர்ட்டா மாகாணத்தில் ஒரு அதிதீவிர எச்சரிக்கை Amber Alert விடுக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அவர்களைத் தேடும் பணியில் RCMP (Royal Canadian Mounted Police) தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
கடந்த ஜூலை 7ஆம் திகதி, Grande Prairieக்கு அருகிலுள்ள Valhalla Centre என்ற இடத்தில் இருந்து, 6 வயது சிறுவனான Lanakai Morrisonஐ அவனது பெற்ற தாயான Krista Morrison (35) அழைத்துச் சென்றுள்ளார்.
அவர்களுடன் தாயின் கூட்டாளியான Daniel Ludwig (35) மற்றும் 4 வயது சிறுவன் Karl Morrison ஆகியோரும் சென்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் B.C. மாகாணத்தில் காணப்பட்டதால், பொதுமக்கள் தேடுதலுக்கு உதவ முடியாது என்ற காரணத்திற்காக ஜூலை 10 அன்று Amber Alert மீளப் பெறப்பட்டது.
எனினும், சிறுவர்கள் இருவரும் இன்னும் அந்த இரண்டு பெரியவர்களுடனேயே இருப்பதாக பொலிஸார் நம்புகின்றனர்.
இவர்கள் Vernon நகருக்கு அருகிலுள்ள Okanagan Valley பகுதியில் காணப்பட்டதாகவும், Kootenays பகுதியை நோக்கி அவர்கள் பயணித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இவர்கள் மிகவும் வேகமாக இடம் மாறக்கூடியவர்கள் என்பதால், தற்போது Northern B.C., Yukon அல்லது Alberta ஆகிய பகுதிகளில் இருக்கக்கூடும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
பெரிய டயர்கள் பொருத்தப்பட்ட 2006 மாடல் சிவப்பு நிற Ford F350 ரக வாகனம் அல்லது ஒரு நடமாடும் வீடு (Motorhome) போன்ற வாகனத்தில் இவர்கள் பயணிக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனே Beaverlodge RCMP பிரிவை 780-354-2955 என்ற இலக்கத்திலோ அல்லது உள்ளூர் பொலிஸாரையோ தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.
