பிராம்டன் கொலை வழக்கு : 17 வயது இரட்டையர்களைத் தேடும் பொலிஸார்!

பிராம்டன் Brampton நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 17 வயது இரட்டைச் சகோதரர்களை முதலாம் நிலை கொலைக் குற்றச்சாட்டின் கீழ் Peel Regional Police தேடிவருகிறது.

கடந்த ஜூலை 5ஆம் திகதி மதியம் 3:30 மணியளவில், Brampton இன் Edenbrook Hill Drive மற்றும் Earlsbridge Boulevard பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

அங்கு 20 மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் துப்பாக்கிக் குண்டுகளுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பலியானவரின் விபரங்களை பொலிஸார் இன்னும் வெளியிடவில்லை.

துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன்பு இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், தேடப்பட்டு வரும் சந்தேக நபர்கள் Bramptonஐச் சேர்ந்த 17 வயதுடைய Shemii Whittaker மற்றும் Shemel Whittaker என்ற இரட்டைச் சகோதரர்கள் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் ஆபத்தான ஆயுதங்களை வைத்துள்ளதால், பொதுமக்கள் யாராவது இவர்களைக் கண்டால் நெருங்க வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உடனடியாக 911 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுமாறும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இந்தச் சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் விபரங்களை ஜூலை 22ஆம் திகதி மாலை 5 மணி வரை அல்லது அவர்கள் கைது செய்யப்படும் வரை வெளியிடுவதற்கு நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

Related Articles

Latest Articles