கனடாவின் காட்டுத்தீ புகை அமெரிக்க எல்லைக்குள் பரவுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு கனடாவே பொறுப்பேற்க வேண்டும் என்றும், இதற்காக அந்நாட்டு பொருட்களுக்கு கூடுதல் வரி (Tariffs) விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் Donald Trump எச்சரித்துள்ளார்.
கனடா தனது காடுகளைச் சரியாகப் பராமரிக்காததால் ஏற்பட்டுள்ள இந்த அலட்சியம், அமெரிக்காவிற்கு பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பை ஏற்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இவருடன் இணைந்து Michigan மாகாண அரசியல்வாதிகள் மற்றும் Ohio அதிபர் வேட்பாளர் Bernie Moreno உள்ளிட்டோரும் கனடாவின் பிரதமர் Mark Carney அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
தற்போது கனடா முழுவதும் 900க்கும் மேற்பட்ட காட்டுத்தீ பரவி வரும் நிலையில், பல பகுதிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றன.
அமெரிக்கர்களின் இந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள Ontario மாகாண முதல்வர் Doug Ford, “குற்றம் சாட்டுவதை நிறுத்திவிட்டு, அமெரிக்கா தங்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், கடந்த காலங்களில் அமெரிக்காவின் காட்டுத்தீ மற்றும் புயல் பாதிப்புகளுக்கு கனடா முன்னின்று உதவியதை அவர் சுட்டிக்காட்டினார்.
