நயாகரா நீர்வீழ்ச்சி துப்பாக்கிச் சூடு: கொலையாளிகள் இருவரைத் தேடி வலைவீச்சு!

கனடாவின் Niagara Falls பகுதியில் வியாழக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, சந்தேகத்திற்குரிய இருவரைப் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Thorold Stone Road மற்றும் Dorchester Road பகுதிக்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்புக்கு வந்த இருவர், அங்குள்ள ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

படுகாயமடைந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தப்பியோடிய குற்றவாளிகளில் முதலாமவர், 25 முதல் 35 வயதுடைய, ஒல்லியான உடல்வாகு மற்றும் கறுத்த நிறமுடைய ஒரு ஆண் என்றும், அவர் சிவப்பு நிறத் துணியை (bandana) அணிந்திருந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டாமவர், 18 முதல் 25 வயதுடைய, அடர் பழுப்பு நிறக் கூந்தல் கொண்ட ஒரு பெண் ஆவார்.

இவர்கள் இருவரும் புதிய மாடல் வெள்ளை நிற Nissan SUV காரில் தப்பியோடியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்றாகக் கருதப்பட்டாலும், ஆயுதங்களுடன் சுற்றும் இவர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் தங்களது கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து உதவுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

Related Articles

Latest Articles