கார்டி ஹோவ் பாலம்: அமெரிக்காவுடனான ஒப்பந்த விவரங்களை வெளியிடுமாறு பிரதமருக்கு கடிதம்!

பல வார கால தாமதத்திற்குப் பிறகு, விண்ட்சர் மற்றும் டெட்ராய்ட் நகரங்களை இணைக்கும் Gordie Howe International Bridge ஜூலை 27 அன்று திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவுடன் கனடா செய்துகொண்ட புதிய ஒப்பந்தத்தின் முழு விவரங்களையும் பகிரங்கமாக வெளியிடுமாறு கனேடிய எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre, பிரதமர் Mark Carney-க்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

2012-ஆம் ஆண்டின் அசல் ஒப்பந்தப்படி, 6.4 பில்லியன் டாலர் கட்டுமானச் செலவை கனடாவே முழுமையாக ஏற்றுக்கொண்டு, அந்த முதலீட்டைத் திரும்பப் பெறும் வரை 100% சுங்கக் கட்டண வருவாயையும் தனக்கே வைத்துக்கொள்ளும் என முடிவாகியிருந்தது.

ஆனால், தற்போதைய புதிய ஒப்பந்தத்தில், முதல் 15 ஆண்டுகளுக்குப் பாலத்தின் நிகர இலாபம் அல்லது வருவாயில் 50% அமெரிக்காவின் பொருளாதார மேம்பாட்டு நிதிக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

இது குறித்துப் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் முரண்பட்ட விளக்கங்களை அளித்து வருவதால், கனடா எதனை அமெரிக்காவிற்கு விட்டுக் கொடுத்துள்ளது.

அதனை மக்கள் அறிய ஒப்பந்தத்தை உடனடியாக வெளியிட வேண்டும் என Poilievre கோரியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த புதிய ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு மிகச் சிறந்த இலாபத்தைத் தரும் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles