காட்டுத்தீயினால் ஏற்படும் புகை, மனிதர்களின் நுரையீரல் மற்றும் இதயத்தை மட்டுமல்லாமல் மூளையையும் கடுமையாகப் பாதிக்கும் என்று புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
புகையில் உள்ள PM2.5 எனப்படும் மிக நுண்ணிய துகள்கள், இரத்த ஓட்டத்தின் வழியாக அல்லது மூக்கின் வழியே நேரடியாக மூளையைச் சென்றடைகின்றன.
இதனால் உடனடியாக மூளையில் வீக்கம் (inflammation) ஏற்பட்டு, மனச்சோர்வு, கவனக்குறைவு மற்றும் தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
நீண்ட கால அடிப்படையில், இந்த நச்சுத் துகள்கள் மூளைச் செல்களைப் பாதித்து, நினைவாற்றல் குறைபாடு மற்றும் டிமென்ஷியா (Dementia) எனப்படும் மறதி நோய்க்கு வழிவகுக்கின்றன.
குறிப்பாக, குறைந்த வருவாய் உடைய மற்றும் காட்டுத்தீ பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கே இந்த ஆபத்து அதிகமாக உள்ளது.
பாதிப்பைக் குறைக்க மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், காற்று சுத்திகரிப்பான்களைப் (air purifiers) பயன்படுத்துமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
