Microsoft சேவைத் தடை : டொரொன்டோவின் முக்கிய நிறுவனங்கள் பாதிப்பு!

cp24

மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வியாழக்கிழமை கனடாவின் டொரொன்டோ (Toronto) நகரிலுள்ள பல முக்கிய நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

செயின்ட் மைக்கேல்ஸ் மருத்துவமனை (St. Michael’s Hospital) உள்ளடங்கிய யூனிட்டி ஹெல்த் டொரொன்டோ (Unity Health Toronto) வலையமைப்பு, உட்கட்டமைப்புச் செயலிழப்பைக் குறிக்கும் “கோட் கிரே” (Code Grey) எச்சரிக்கையை அறிவித்தது.

அத்துடன் யூனிவர்சிட்டி ஹெல்த் நெட்வொர்க் (University Health Network) மற்றும் சன்னிபுரூக் மருத்துவமனை (Sunnybrook Hospital) ஆகியவற்றின் மின்னஞ்சல் சேவைகளும் தற்காலிகமாக முடங்கின.

எனினும், நோயாளர்களுக்கான சிகிச்சையில் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், அவசரத் தேவைகளுக்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், டொரொன்டோ நகர சபையின் (City of Toronto) சில சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதுடன், வியா ரயில் (VIA Rail) பயணிகளுக்கும் மின்னஞ்சல் தகவல்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டொரொன்டோ பல்கலைக்கழகம் (University of Toronto), செனெகா பாலிடெக்னிக் (Seneca Polytechnic) மற்றும் ஜார்ஜ் பிரவுன் பாலிடெக்னிக் (George Brown Polytechnic) ஆகிய கல்வி நிறுவனங்களின் மின்னஞ்சல் சேவைகள் பாதிக்கப்பட்ட போதிலும், வகுப்புகள் வழமை போல் நடைபெற்றுள்ளன.

பிற்பகல் 1 மணியளவில் ஆரம்பமான இந்தத் தடையைச் சீரமைக்கும் பணிகளில் நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சேவைகளை முழுமையாக மீட்டெடுக்கத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் தெரிவித்துள்ளது.

Previous articleஅல்பேர்ட்டாவில் World Junior Championship போட்டிகளில், Visa ரஷ்ய வீரர்களுக்கு பங்கேற்க அனுமதியில்லை!
Next articleBrampton – Stellantis விற்பனை விவகாரம்: வழக்குத் தொடர தயாராகும் கனடா அரசு!