கனடாவின் ஆலிஸ்டன் (Alliston) பகுதியில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது சிறந்த நண்பரான வில்லியம் ஷெர்ன்ஹேமரை (William Schernhammer) சுட்டுக் கொன்று, சடலத்தை வீசிச் சென்ற கெப்ரியல் டிசெக்கோவிற்கு (Gabriel DiCecco) 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
27 வயதான கெப்ரியல் டிசெக்கோவிற்கு பாரி (Barrie) நீதிமன்றம் மொத்தமாக 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நிலையில், அவர் ஏற்கனவே சிறையில் கழித்த காலப் பகுதியைக் கழித்து எஞ்சிய 8 ஆண்டுகளை சிறையில் தண்டனையாக அனுபவிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தன் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்திலேயே சுட்டதாக பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர் சாம் கோல்ட்ஸ்டீன் (Sam Goldstein) வாதிட்டபோதிலும், அத்தகைய அச்சுறுத்தல் எதுவும் இல்லை என நீதிபதி வனேசா கிறிஸ்டி (Justice Vanessa Christie) நிராகரித்துள்ளார்.
“எத்தனை ஆண்டுகள் தண்டனை அளித்தாலும் அது எனது மகனின் உயிருக்கு ஈடாகாது” என பாதிக்கப்பட்டவரின் தாய் ரஷெல் ஷெர்ன்ஹேமர் (Rachelle Schernhammer) உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
