கனடாவின் (Canada) தென்கிழக்கு கல்கரி (Calgary) பகுதியில் உள்ள ‘மிட்பார்க் கோர்ட்’ (Midpark Court) அலுவலகக் கட்டிடத்தில் செவ்வாய்க்கிழமை காலை எதிர்பாராத பரபரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இளம் ஆண் மூஸ் (Moose) விலங்கு ஒன்று, கட்டிடத்தின் கண்ணாடிச் சுவரை உடைத்துக்கொண்டு நேராக வரவேற்பறை (Lobby) மற்றும் பாதைகளுக்குள் நுழைந்தது.
இந்த திடீர் சம்பவத்தால் அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கட்டிடத்தின் முகாமையாளர் கிராண்ட் தோமஸ்-நெல்சன் (Grant Thomas-Nelson) மற்றும் உளவியலாளர் ஏமி வில்சன் (Amy Wilson) உள்ளிட்ட ஊழியர்கள் விலங்குக்கு எவ்வித இடையூறும் தராமல், கதவுகளைத் திறந்து அதை வெளியேற்ற முயன்றனர்.
ஆனால், அந்த மூஸ் நுழைந்த வழியிலேயே உடைந்த கண்ணாடி வழியாக மீண்டும் வெளியேறியது.
சம்பவ இடத்திற்கு வந்த அல்பர்ட்டா வனவிலங்குப் பாதுகாப்பு (Alberta Fish and Wildlife) அதிகாரிகள், அருகிலிருந்த மூஸைப் பிடித்துப் மயக்கமடையச் செய்து, ‘வாட்டர் வேலி’ (Water Valley) வனப்பகுதியில் பாதுகாப்பாகக் கொண்டு போய் விட்டனர்.
உடைந்த கண்ணாடியால் மூஸின் உடலில் சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
