கனடா – ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டைப் புறக்கணித்தார் Quebec முதல்வர்!

மொண்ட்ரியாலில் (Montreal) நடைபெறும் கனடா – ஐரோப்பிய ஒன்றிய (Canada-EU) உச்சிமாநாட்டில் அதிகாரப்பூர்வமாக உரைநிகழ்த்த வாய்ப்பளிக்கப்படவில்லை எனத் தெரிவித்து, Quebec மாகாணப் முதல்வர் போல் செயிண்ட்-பியர் பிளாமண்டன் (Paul St-Pierre Plamondon) அம்மாநாட்டைப் புறக்கணித்துள்ளார்.

தங்கள் மாகாண மண்ணில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் Quebec குரல் புறக்கணிக்கப்படுவதாகவும், வெறும் பார்வையாளராக இருக்கத் தயார் இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரதமருக்கான சிறப்பு விருந்தில் பங்கேற்குமாறு கனடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) விடுத்த அழைப்பையும் அவர் நிராகரித்துள்ளார்.

அதேவேளை, இப்புறக்கணிப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சார்லஸ் மில்லியார்ட் (Charles Milliard) கண்டனம் தெரிவித்துள்ளார்.

இம்மாநாட்டில் Quebec தலைமை இராஜதந்திரி பாஸ்கல் பாரடிஸ் (Pascal Paradis) பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles