ஆர்க்டிக் (Arctic) பகுதியில் வழமைக்கு மாறாக முன்கூட்டியே துருவச் சுழல் (Polar Vortex) பலவீனமடைந்து வருவதால், வட அரைக்கோளத்தில் குளிர்ந்த காற்று பரவக்கூடும் என்று The Weather Network தெரிவித்துள்ளது.
எனினும், இதனால் கனடா (Canada) நேரடியாகப் பாதிக்கப்படுமா என்பது குறித்து வானிலை நிபுணர்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
மேலடுக்கு வளிமண்டலத்தில் (Stratosphere) நிகழும் இந்த மாற்றம் சுழலின் போக்கை மாற்றி, மேற்பரப்பு வெப்பநிலையைக் குறைக்கக்கூடும்.
இந்நிலைமை கனடாவை அல்லது ஐரோப்பாவைச் சென்றடையலாம்; அல்லது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போகலாம் என எதிர்வுகூறப்படுகிறது.
இம்முறை மிகவும் வலுவான எல் நினோ (El Niño) நிகழ்வு நிலவுவதால், கனடாவில் பொதுவான மிதமான குளிர்காலமே நிலவ வாய்ப்புள்ளது.
Western University ஆராய்ச்சியாளர் Dr. Christoph Gatzen கூறுகையில், இது உடனடிப் பெரும் மாற்றத்தைக் கொண்டுவராது என்பதால் அச்சமடையத் தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, வழமையான குளிர்காலக் கோட்டுகள், பூட்ஸ்களுடன் கனேடியர்கள் தங்கள் வழக்கமான தயாரிப்புகளைத் தொடருமாறு வானிலை வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
