கனடா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டின் இரவு விருந்து: பிரதமருக்கும் கியூபெக் முதல்வருக்கும் இடையே சர்ச்சை

மொன்றியலில் (Montreal) நடைபெறவுள்ள கனடா-ஐரோப்பிய ஒன்றிய (Canada-EU) உச்சிமாநாட்டில், தன்னைப் பேச விடாமல் கூட்டாட்சி அரசு தடுப்பதாகக் கியூபெக் மாகாண முதல்வர் போல் செயிண்ட்-பியர் பிளமொண்டன் (Paul St-Pierre Plamondon) குற்றம் சாட்டியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுடனான இரவு விருந்திற்கு கியூபெக் முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், உச்சிமாநாட்டில் உரையாற்ற அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இது குறித்துக் கருத்து தெரிவித்த கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), “விருந்திற்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, ஆனால் அவர் அதை நிராகரித்துவிட்டார்.

எனவே, அந்த ஆசனத்தைக் வெறுமையாக விடுவது அவருடைய சொந்த முடிவு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், கியூபெக்கின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு வெறுமனே ஒரு விருந்தில் கலந்துகொள்வது போதுமானதாக இருக்காது என்றும், மாகாணத்தைக் கலந்தாலோசிக்காமல் பொருளாதார முடிவுகளை கூட்டாட்சி அரசு திணிக்க முயல்வதாகவும் கியூபெக் முதலமைச்சர் தனது சமூக வலைத்தளத்தில் விமர்சித்துள்ளார்.

அதேவேளை, பூகோள அரசியல் மற்றும் சர்வதேச உச்சிமாநாடுகள் கூட்டாட்சி அரசின் (Federal jurisdiction) அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என மத்திய தொழில்துறை அமைச்சர் மெலனி ஜோலி (Mélanie Joly) சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கிறிஸ்டின் ப்ரெஷெட் (Christine Fréchette) விடுத்த வேண்டுகோளின்படி, இந்த உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ஒரு வரவேற்பு உபசரிப்பை நடத்த கியூபெக் அரசு கேட்டிருந்த போதிலும், அதற்கு ஒட்டாவா அனுமதி மறுத்துள்ளதாகக் கியூபெக் அரசு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles