கனடாவில் மருத்துவ உதவியுடன் கூடிய மரணம் (MAID) தொடர்பான சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான புதிய சட்டமூலம் நீதி அமைச்சர் Sean Fraser செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்கிறார்.
மனநலப் பாதிப்பு மட்டுமே ஒரே காரணமாகக் கொண்டு மருத்துவ உதவியுடன் கூடிய மரணத்தைக் கோருவதை காலவரையறையின்றித் தடை செய்ய இந்தச் சட்டத் திருத்தம் வழிவகுக்கிறது.
பெரும்பான்மையான நிபுணர்களின் பரிந்துரையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் நினைவாற்றல் அல்லது முடிவெடுக்கும் திறனை இழக்கக்கூடிய தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு முன்னதாகவே MAID அனுமதியைப் பதிவுசெய்து கொள்வதற்கான வாய்ப்புகளும் இந்த மசோதாவில் சேர்க்கப்படவுள்ளன.
சுகாதார அமைச்சர் Marjorie Michel உடன் இணைந்து ஒட்டாவா (Ottawa) நகரில் செய்தியாளர்களைச் சந்தித்து இச்சட்டத்திருத்தங்கள் குறித்த முழுமையான விடயங்களை Sean Fraser விளக்கவுள்ளார்.
