கனடாவில் மிக நீண்ட காலம் மேயராக இருந்த Gord Krantz இம்முறை தோல்வி!

கனடாவில் 44 ஆண்டுகளுக்கும் மேலாக மிக நீண்ட காலம் மேயராகப் பணியாற்றி வரலாற்று சாதனை படைத்த Gord Krantz, தனது 15ஆவது மறுதேர்தல் போட்டியில் தோல்வியடைந்துள்ளார்.

ஒன்ராறியோவின் (Ontario) Milton நகரின் மேயராக 1980ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 14 பதவிக்காலங்களில் பணியாற்றியவர் Gord Krantz. அதற்கு முன் 1965 முதல் 1980 வரை நகரசபை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

36 ஆண்டுகள் மிசிசாகா (Mississauga) மேயராக இருந்த Hazel McCallion என்பவரின் சாதனையை முறியடித்து, கனடா வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் மேயராக இருந்தவர் என்ற பெருமையை Gord Krantz பெற்றிருந்தார்.

திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தலில், Ward 1 நகரசபை உறுப்பினராகப் பணியாற்றிய George Minakakis என்பவர் Gord Krantz-ஐ வீழ்த்தி, Milton நகரின் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles