கனடாவின் டொரண்டோ (Toronto) நகரில் யூத வழிபாட்டுத் தலங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கத் தூதரகம் (U.S. Consulate) ஆகியவற்றைக் குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு ஈரான் அரசே நிதியுதவி அளித்துள்ளதாக CBC News புலனாய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது ஈரானுக்கு ஏற்பட்ட மோதல்களுக்குப் பிறகு, டொரண்டோவில் அதிகாலை வேளையில் திருடப்பட்ட கார்களில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி, அதனை காணொளியாகவும் பதிவுசெய்த துப்பாக்கி ஏந்திய கும்பலைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“விற்பனைக்கான வன்முறை” (Violence as a Service) என்னும் பாணியில், குறியாக்கப்பட்ட ஆப்கள் (Encrypted apps) மூலம் 15 முதல் 20 வயதுடைய இளைஞர்களை இடைத்தரகர்கள் வசப்படுத்தி இந்தத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
ஈரான் புரட்சிகரப் காவல் படையுடன் தொடர்புடைய HAYI அமைப்பைச் சேர்ந்த Mohammad Baqer al-Saadi என்பவரை அமெரிக்க FBI கைது செய்துள்ளதுடன், அவர் கனடா மற்றும் ஐரோப்பாவில் 18க்கும் மேற்பட்ட தாக்குதல்களுக்குத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
கனடாவும் பிற நாடுகளும் ஈரானின் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்துள்ளன.
