இருக்கைகளில் கோளாறு: கனடாவில் 24,000க்கும் அதிகமான டொயோட்டா வாகனங்கள் மீழ்ழைப்பு!

இருக்கைகளில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாடு காரணமாக கனடாவில் (Canada) 24,000க்கும் மேற்பட்ட ‘டொயோட்டா சியன்னா ஹைபிரிட்’ (Toyota Sienna Hybrid) வகை வாகனங்களை Toyota நிறுவனம் Recall செய்துள்ளது.

2022 முதல் 2026 ஆம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட வாகனங்களில் இந்த பிரச்சனை கண்டறியப்பட்டுள்ளதாக Transport Canada வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்து ஏற்படும் தருணத்தில் ‘சீட்பெல்ட் பிரிடென்ஷனர்’ (seatbelt pretensioner) செயல்படும் போது, வாகனத்தின் இரண்டாவது வரிசை இருக்கைகள் (second-row seats) நிலைகுலைந்து நகரக்கூடிய ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் பயணிகளுக்குக் காயம் ஏற்படும் அபாயம் உள்ளதால், மறுசீரமைப்புப் பணிகள் முடியும் வரை இரண்டாவது வரிசை இருக்கைகளில் பயணிகளை அமர்த்த வேண்டாம் என வாகன உரிமையாளர்களுக்கு டொயோட்டா அறிவுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்குக் கடிதம் மூலம் அறியத்தரப்படும் என்றும், வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனத்தின் VIN இலக்கத்தை பயன்படுத்தி டொயோட்டா கனடாவின் இணையதளத்தில் பரிசோதித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles