ஒன்டாரியோவில் (Ontario) உள்ள நான்கு பாடசாலை சபை மற்றும் இரண்டு ஆசிரியர் சங்கங்களுக்கு எதிராக 12 யூத ஆசிரியர்கள் ஒன்டாரியோ மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் (Human Rights Tribunal of Ontario) முறைப்பாடு அளித்துள்ளனர்.
டொராண்டோ மாவட்ட பாடசாலை சபை (Toronto District School Board – TDSB), யோர்க் பிராந்திய மாவட்ட பாடசாலை வாரியம் (York Region District School Board – YRDSB), எலிமெண்டரி ஆசிரியர் சம்மேளனம் (ETFO) மற்றும் ஒன்டாரியோ இரண்டாம் நிலை ஆசிரியர் சம்மேளனம் (OSSTF) ஆகியவை இதில் உள்ளடங்குகின்றன.
தங்கள் மதம் மற்றும் பூர்வீகம் காரணமாகத் பாகுபாடு காட்டப்பட்டதாகவும், பாடசாலைகளில் இடம்பெற்ற யூத எதிர்ப்புச் சம்பவங்களைப் முறைப்பாடு அளித்ததற்காகத் தண்டிக்கப்பட்டதாகவும் ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேசைகளில் ‘சுவஸ்திகா’ (swastika) குறியீடுகள் வரைதல், ஹிட்லர் பாடல்கள் பாடுதல் போன்ற செயல்கள் இடம்பெற்றதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் தங்களையே தண்டித்ததாகவும் வழக்கறிஞர் கத்ரின் மார்ஷல் (Kathryn Marshall) தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஆசிரியரும் $150,000 இழப்பீடு கோரியுள்ளதுடன், பாடசாலைகளில் யூத எதிர்ப்பைக் கட்டுப்படுத்த தெளிவான கொள்கைகளை நடைமுறைப்படுத்தக் கோரியுள்ளனர்.
இதற்கிடையில், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சட்டப்பூர்வமாக பதிலளிக்கவுள்ளதாக சம்பந்தப்பட்ட பாடசாலை சபை தெரிவித்துள்ளன.
