GTA பகுதியில் வார இறுதியில் எரிபொருள் விலை லீட்டருக்கு 14 சதம் உயர வாய்ப்பு!

cp24

GTA பகுதியில் வரும் வார இறுதிக்குள் எரிபொருள் விலை கணிசமாக உயரும் என்பதால், வாகன ஓட்டிகளை உடனடியாக எரிபொருள் நிரப்பி கொள்ளுமாறு சந்தை பகுப்பாய்வாளர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

கனடியன்ஸ் பார் அபோர்டபிள் எனர்ஜி (Canadians for Affordable Energy) அமைப்பின் தலைவரான டான் மெக்டீக் (Dan McTeague) அளித்த தகவலின்படி, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் எரிபொருள் விலை இரு கட்டங்களாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது:

அதன்படி, வெள்ளிக்கிழமை லீட்டருக்கு 7 சதம் உயர்ந்து, சராசரியாக 185.9 சதத்தை எட்டும்.

சனிக்கிழமையன்று மேலும் 7 சதம் உயர்ந்து, டொராண்டோ (Toronto), GTA மற்றும் தெற்கு ஒன்டாரியோவின் (southern Ontario) பெரும்பாலான பகுதிகளில் சராசரியாக 192.9 சதமாக அதிகரிக்கும்.

கடந்த மாதங்களில் கோடைகால எரிபொருள் கலவையிலிருந்து குளிர்கால கலவைக்கு மாறியதன் காரணமாக எரிபொருள் விலையில் வீழ்ச்சி பதிவாகியிருந்த நிலையில், தற்போது இந்த விலை உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleஒன்டாரியோ பாடசாலை சபை மீது 12 யூத ஆசிரியர்கள் மனித உரிமைகள் முறைப்பாடு!
Next article‘மேடே’ (Mayday) கனடியத் தொலைக்காட்சித் தொடரைப் பார்த்து விமானத்தைக் கட்டுப்படுத்திய பயணி!