‘மேடே’ (Mayday) கனடியத் தொலைக்காட்சித் தொடரைப் பார்த்து விமானத்தைக் கட்டுப்படுத்திய பயணி!

cp24

துபாயில் (Dubai) இருந்து டெல் அவிவ் (Tel Aviv) நோக்கிச் சென்ற FlyDubai விமானத்தில், விமானி ஒருவர் நடுவானில் கத்திகுத்துக்கு உள்ளான சம்பவத்தின்போது, கனடிய ஆவணத் தொடரான ‘மேடே‘ (Mayday) மூலமாகப் பெற்ற அறிவே விமானத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விபத்தைத் தவிர்க்க உதவியதாக பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உண்மையான விமான விபத்துகள் மற்றும் அசம்பாவிதங்கள் குறித்து ஆராயும் இந்த ஆவணத் தொடரைத் தயாரித்த தயாரிப்பாளர் அலெக்ஸ் பைஸ்ட்ராம் (Alex Bystram), 170க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சம்பவத்துடன் தங்கள் நிகழ்ச்சி தொடர்புபட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார்.

இஸ்ரேலியப் பயணியான யானிவ் ஹயூன் (Yaniv Hayoun), காயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சார் (Capt. Smit Machchhar) மற்றும் ஏனைய பயணிகளுடன் இணைந்து விமானத்தின் கட்டுப்பாட்டை மீட்டெடுத்துள்ளார்.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் (Benjamin Netanyahu) பேசிய ஹயூன், வட அமெரிக்காவிற்கு வெளியே ‘ஏர் கிராஷ் இன்வெஸ்டிகேஷன்‘ (Air Crash Investigation) என அழைக்கப்படும் இந்தத் தொடரைப் பார்த்ததன் மூலமே விமானத்தைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்தத் தொடர் ஒரு கற்பித்தல் கருவி அல்ல என்றும், காயமடைந்த நிலையிலும் காக்பிட் (cockpit) கதவைத் திறந்து உதவிய இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரின் துரிதமான செயல்பாடே இந்த ஆபத்தைத் தவிர்த்ததாகவும் தயாரிப்பாளர் பைஸ்ட்ராம் பாராட்டியுள்ளார்.

Previous articleGTA பகுதியில் வார இறுதியில் எரிபொருள் விலை லீட்டருக்கு 14 சதம் உயர வாய்ப்பு!
Next articleமலிவு விலை சூப்பர்மார்க்கெட்டாக மாறும் டொராண்டோவின் ‘மெட்ரோ’ அங்காடி!