கனடாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களைக் கருத்தில் கொண்டு, ஐந்து முக்கிய மாகாணங்களில் குறைந்தபட்ச மணித்தியால ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
25 முதல் 40 சென்ட்கள் வரையில் இந்த ஊதிய உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஒன்டாரியோவில் (Ontario) – $17.95, பிரின்ஸ் எட்வர்ட் தீவில் (Prince Edward Island – P.E.I.) – $17.30, நோவா ஸ்கோஷியாவில் (Nova Scotia) – $17.00, மணிட்டோபாவில் Manitoba – $16.40,சஸ்காட்செவனில் (Saskatchewan) – $15.70 ஊதிய உயர்வும் நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்த மாற்றங்களுடன், 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஊதிய உயர்வு வழங்காத அல்பெர்ட்டா (Alberta) மாகாணத்தைத் தவிர, கனடாவின் அனைத்து மாகாணங்களும் பிராந்தியங்களும் இந்த ஆண்டில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தியுள்ளன.
நாட்டிலேயே மிகக் குறைந்த ஊதியமாக அல்பெர்ட்டாவில் $15 வழங்கப்படுகின்ற நிலையில், நுனாவுட் (Nunavut) பிராந்தியம் மணித்தியாலத்திற்கு $20 க்கும் அதிகமாக வழங்கி முன்னிலையில் உள்ளது.
