கனடாவின் அரச இணையதளத்தை ஊடுருவ செயற்கை நுண்ணறிவு (AI) முகவர்கள் முயற்சி

ctvnews

கனடாவின் அரச இணையதளமொன்றை செயற்கை நுண்ணறிவு (AI) முகவர்கள் ஊடுருவ முயற்சித்துள்ளதாக Transluce என்ற AI ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Library and Archives Canada இணையதளத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாகவும், அரசாங்கத்தின் அமைப்புகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என கனடிய சைப்ர பாதுகாப்பு மையம் (Canadian Centre for Cyber Security) உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தச் செயல்பாடு ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் கடந்த கால உத்திகளை ஒத்திருப்பதாக டிரான்ஸ்லூஸ் (Transluce) சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் கனடிய அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு செய்து வருகிறது.

சமீபத்தில் ஆஸ்திரேலிய அரசாங்க இணையதளத்திலும் ஓபன்ஏஐ (OpenAI) முகவர் ஊடுருவியதற்காக அந்நிறுவனம் மன்னிப்பு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஅல்பெர்ட்டா பிரியும் பட்சத்தில் 13% விற்பனை வரி விதிக்கப்படலாம்: புதிய அறிக்கை எச்சரிக்கை!
Next articleசுகாதாரத் துறையில் AI தொழில்நுட்பம்: அமெரிக்க கருவிகளுக்கு கனடியர்கள் எதிர்ப்பு!