கனடாவின் Ontario மாகாணத்தில், அறுவை சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகளை லாபநோக்கற்ற தனியார் கிளினிக்குகளுக்கு (Private Clinics) மாற்றுவதன் மூலம் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க முடியும் என்ற அரசின் கூற்றுக்கு மாறாக, காத்திருப்பு நேரம் அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
Canadian Centre for Policy Alternatives (CCPA) அமைப்பு வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், 2017 முதல் 2025 வரையிலான காலத்தில் Cataract அறுவை சிகிச்சை மற்றும் MRI பரிசோதனைகளுக்கான காத்திருப்பு நேரம் கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொது மருத்துவமனைகளை விட தனியார் மையங்களில் இவ்வகை சிகிச்சைகளுக்கான செலவு இரு மடங்காக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள Ontario சுகாதாரத்துறை, பொதுமக்களுக்கு விரைவான சிகிச்சை சேவைகளை வழங்கி மருத்துவமனைகளின் சுமையைக் குறைப்பதற்காகவே $101 பில்லியனுக்கும் அதிகமான சாதனை அளவிலான நிதி ஒதுக்கீட்டுடன் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
