கனடாவின் Quebec மாகாணத்தில் உள்ள Montreal நகரத்தின் தெற்குப் பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற கொடூர ஹெலிகாப்டர் விபத்தில், பெண் விமானி உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
Sainte-Brigide-d’Iberville பகுதியில் உள்ள திறந்தவெளி நிலப்பரப்பில் இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இதில் 50 வயதான விமானி Suzanne Jutras, Chantal Raymond, அவரது மகன் Loucas Perreault மற்றும் அவரது மகளின் கணவரான Gabriel Jasmin ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தாயாரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக குடும்பத்தினர் மேற்கொண்ட பொழுதுபோக்கு ஹெலிகாப்டர் பயணத்தின்போதே இத்துயரம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்த Gabriel Jasmin பிரபலமான வானொலி அறிவிப்பாளர் ஆவார்.
இச்சம்பவம் குறித்து கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (Transportation Safety Board – TSB) மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும், விமானியும் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
