Kamloops கருப்பு ஆடைகளுடன் வலம்வந்த நபர்களின் போராட்டம்: RCMP தீவிர விசாரணை!

ctvnews

Canada, British Columbia மாகாணத்திலுள்ள Kamloops பகுதிக்கு அருகாமையிலுள்ள Tk’emlúps te Secwepemc பழங்குடியினக் குடியிருப்பில் இடம்பெற்ற வெள்ளையின தேசியவாதிகளின் போராட்டத்தை அடுத்து, RCMP (Royal Canadian Mounted Police) காவற்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முகமூடி அணிந்து, கருப்பு ஆடைகளுடன் வலம்வந்த நபர்கள் Second Sons எனும் வெள்ளையின தேசியவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முன்னாள் Kamloops Indian Residential School அமைந்திருந்த பகுதிக்கு அருகே “got bones” என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தி, பழங்குடியின குழந்தைகளின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதை கேள்விக்குட்படுத்தும் வகையில் இவர்கள் செயற்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை Kúkwpi7 Rosanne Casimir கண்டித்துள்ளதுடன், தமது மக்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை எனத் தெரிவித்துள்ளார்.

Prime Minister Mark Carney இந்தச் செயலை வெறுக்கத்தக்கது மற்றும் கோழைத்தனமானது எனக் கண்டித்துள்ளார்.

அதேபோல் NDP Leader David Eby, B.C. Conservative Leader Lorne Doerkson மற்றும் B.C. Green Party Leader Emily Lowan ஆகிய அரசியல்தலைவர்களும் இந்த இனவாதச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான காணொளிகள் அல்லது தகவல்கள் வைத்திருப்போர் உடனே Tk’emlúps Rural RCMP (250-314-1800) அல்லது Kamloops RCMP (250-828-3000) பிரிவை தொடர்புகொள்ளுமாறு காவற்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Previous articleமருத்துவ சிகிச்சைகளுக்கு காத்திருப்பு நேரம் அதிகரிப்பு – புதிய அறிக்கை தகவல்!
Next articleGuelph பல்கலைக்கழக Homecoming கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கலவரம்: கட்டுக்கடங்காத கூட்டம் மற்றும் பொலிஸாரின் தீவிர நடவடிக்கை!