Costco வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை! இந்த Yogurt-ஐ சாப்பிட வேண்டாம் — பூஞ்சை இருக்கலாம்

Costco-வில் அண்மையில் Yogurt வாங்கியிருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் fridge-ஐ ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

Costco Canada தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான உணவுப் பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

The Greek Gods Honey Yogurt – 2 × 650 கிராம் மற்றும்

The Greek Gods Organic Yogurt Plain – 2 × 650 கிராம் ஆகிய சில தயாரிப்புகள் மீளழைக்கப்பட்டுள்ளன. 

இந்த yogurt-களில் பூஞ்சை இருக்கக்கூடிய சாத்தியம் கண்டறியப்பட்டதையடுத்து, தயாரிப்பு நிறுவனம் குறித்த பொருட்களை திரும்பப் பெறுகிறது.

Costco பதிவுகளின்படி, இந்தப் பொருட்கள் 2026 ஜூன் முதல் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் Costco warehouse அல்லது Costco Business Centre-களில் வாங்கப்பட்டிருக்கலாம்.

குறித்த yogurt-ஐ சாப்பிடவோ, பரிமாறவோ, விற்பனை செய்யவோ வேண்டாம் என Costco அறிவுறுத்தியுள்ளது.

உங்களிடம் பாதிக்கப்பட்ட தயாரிப்பு இருந்தால், அதனை Costco warehouse-க்கு திருப்பிக் கொடுத்து முழுப் பணத்தையும் refund ஆக பெற்றுக்கொள்ளலாம்.

Related Articles

Latest Articles