Markham பெண்கள் washroom-இல் ரகசிய கேமராக்கள்! Bradford நபர் மீது 5 குற்றச்சாட்டுகள்!

Markham நகரில் பெண்கள் பயன்படுத்தும் washroom இல் ரகசிய கேமராக்களை பொருத்தி வீடியோ பதிவு செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், Bradford பகுதியைச் சேர்ந்த 44 வயதான நபர் ஒருவர் மீது York Regional Police குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.

Robin Cleland என்ற 44 வயதான நபர் மீது, ஐந்து Voyeurism (பார்வைக் காமம்) குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த பிப்ரவரி 26ஆம் திகதி இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பெண்கள் பயன்படுத்தும் washroom களுக்குள் மறைத்து வைக்கப்பட்ட கேமரா மூலம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

மேலும், பல வருடங்களுக்கு முந்தைய திகதிகளைக் கொண்ட வீடியோக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் புகைப்படத்தையும் York Regional Police வெளியிட்டுள்ளது.

இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

குறிப்பு: இவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related Articles

Latest Articles