Toronto Zoo-வில் பிறந்த அரியவகை Pygmy நீர்யானை

Toronto Zoo-வில் அழிவின் அபாயத்தை எதிர்கொண்டுவரும் பிக்மி நீர்யானை இனத்தைச் சேர்ந்த அழகிய பெண் குட்டி ஒன்று பிறந்துள்ளது.

20 வயதான Kindia என்ற தாய் நீர்யானை, ஆகஸ்ட் 2ஆம் திகதி இந்தக் குட்டியை ஈன்றது. பிறந்த 15 நிமிடங்களுக்குள் எழுந்து நிற்க முயன்ற குட்டி, சில மணி நேரங்களிலேயே நடமாட ஆரம்பித்தது. 

தாயும் குட்டியும் நலமாக உள்ளபோதும், அவை தற்போது பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படாத பகுதியில் ஓய்வெடுத்து வருகின்றன. 

மேற்கு ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இந்த அரிய இனத்தில், சுமார் 2,000 முதல் 3,000 நீர்யானைகள் மட்டுமே இயற்கையில் எஞ்சியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles