வீட்டிலிருக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றுவதன் மூலம் இடத்தை மிச்சப்படுத்துவதோடு, கூடுதல் வருமானத்தையும் ஈட்ட முடியும் என ஒழுங்கமைக்கும் நிபுணரான Megan Arthurs (மேகன் ஆர்தர்ஸ்) தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கருத்து தெரிவித்த அவர், அனைத்துப் பொருட்களையும் ஒரே தளத்தில் விற்க முயல்வது மக்கள் செய்யும் பெரிய தவறு என்றும், பொருட்களுக்கு ஏற்ப சரியான விற்பனைத் தளங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவரது ஆலோசனையின்படி, தளபாடங்கள் (Furniture), விளையாட்டு உபகரணங்கள் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு Facebook Marketplace (பேஸ்புக் மார்க்கெட்பிளேஸ்) சிறந்ததாகும்.
ஆடைகள், காலணிகள் மற்றும் கைப்பைகளுக்கு Poshmark (போஷ்மார்க்) தளமும், மின்னணு சாதனங்கள் (Electronics) மற்றும் அரிய சேகரிப்புகளுக்கு சர்வதேச வாடிக்கையாளர்களைக் கொண்ட eBay (ஈபே) தளமும் பொருத்தமானவை.
உயர்தர ஆடைகள் மற்றும் கலைப் பொருட்களை சொகுசுப் பொருட்கள் விற்பனை நிலையங்களிலும் (Consignment shops), முழு வீட்டை காலி செய்யும்போது ஆன்லைன் ஏலச் சேவைகளையும் (Online auction services) நாடலாம்.
பழைய பொருட்கள் அனைத்தும் அதிக மதிப்புடையவை என்ற தவறான எண்ணத்தை தவிர்த்துவிடுமாறும் அவர் கூறியுள்ளார்.
இந்த நடைமுறைக்கு பயன்படும் பொருட்கள், பழைய இசைத்தட்டுகள் (Vinyl records), லெகோ செட்கள் (Lego sets) மற்றும் விளையாட்டு அட்டைகள் (Sports cards) போன்றவற்றுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
