B.C. மாகாணத்தின் Cariboo பிராந்தியத்தில் உள்ள ஏரி ஒன்றில் படகு கவிழ்ந்ததில், 17 வயது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மாலை, Stony Lake பகுதியில் நான்கு பேர் நீரில் மூழ்கியதாகக் கிடைத்த தகவலையடுத்து Quesnel RCMP அதிகாரிகள் அங்கு விரைந்தனர்.
நீரில் மூழ்கியவர்களில் மூன்று பேர் பாதுகாப்பாகக் கரை திரும்பிய நிலையில், படகை ஓட்டிச் சென்ற இளைஞர் இன்னும் கண்டறியப்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், Prince George பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞரின் குடும்பத்தினருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை அன்று RCMP இன் Underwater Recovery Team ஏரியில் தேடுதல் நடத்தவுள்ளது.
இதனிடையே, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மார்ச் முதல் மே வரையிலான மூன்று மாதங்களில் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 5 இல் இருந்து 9 ஆக அதிகரித்துள்ளதாக B.C. Coroners Service தெரிவித்துள்ளது.
கோடைகாலம் அதிக ஆபத்துக்களைக் கொண்டு வருவதால், மக்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு தலைமை மரண விசாரணை அதிகாரி Jatinder Baidwan கேட்டுக்கொண்டுள்ளார்.










