றொரண்டோவில் 15 வயது சிறுவன் துப்பாக்கிச் சூட்டில் காயம் – பொலிஸார் விசாரணை!

கனடாவின் றொரண்டோவில் (Toronto) 15 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நோர்த் யோர்க் (North York) பகுதியில் உள்ள செரோகி பவுலேவார்ட் (Cherokee Boulevard) மற்றும் ஷாவ்னி சர்க்கிள் (Shawnee Circle) ஆகிய வீதிகள் சந்திக்கும் பகுதிக்கு அருகில், இரவு 10 மணிக்கு சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 15 வயது சிறுவன், சிகிச்சைக்காகத் தானாகவே மருத்துவமனைக்குச் சென்று அனுமதிந்துள்ளான்.

அச்சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், மேலதிக விபரங்கள் எதையும் பொலிஸார் இன்னும் வெளியிடவில்லை.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles