கனடாவில் இரண்டு TTC பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 13 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கனடாவின் ரொறன்ரோவில் (Toronto) உள்ள வெஸ்டன் (Weston) பகுதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற பயங்கர பேருந்து விபத்தில் 13 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

வெஸ்டன் வீதி (Weston Road) மற்றும் லாரன்ஸ் அவென்யூ (Lawrence Avenue) சந்திப்பிற்கு அருகில், பிற்பகல் 3:00 மணிக்கு முன்னதாக இரண்டு TTC பேருந்துகள் (TTC buses) ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் (Police) தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 13 பேருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் 16 வயதுடைய ஒரு சிறுவனும் அடங்குவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்கான காரணம் குறித்து மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles