றொரண்டோ (Toronto) நகரின் பரபரப்பான TMU சுரங்கப்பாதை நிலையத்தில், பயணிகள் தண்டவாளத்தில் விழுவதைத் தடுக்க இரும்பு கம்பி தடுப்புகளை (Steel barriers) அமைக்கும் புதிய திட்டத்தை மேயர் Olivia Chow அறிவித்துள்ளார்.
Sankofa Square அருகே உள்ள இந்த நிலையத்தில் இந்த ஆண்டு இத்திட்டம் சோதனை முறையில் தொடங்கப்பட்டு, அடுத்த ஆண்டு மேலும் 4 நிலையங்களுக்கு விரிவாக்கப்படவுள்ளது.
எனினும், இந்த இரும்பு தடுப்புகள் பயணிகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்தாது என ‘TTCriders’ என்ற போக்குவரத்து ஆதரவு குழுவைச் சேர்ந்த August Puranauth தெரிவித்துள்ளார்.
ரயில்கள் வரும்போது தானாகத் திறக்கும் முழுமையான ‘பிளாட்பார்ம் கதவுகளை’ (Platform edge doors) அமைப்பதே நிரந்தர தீர்வு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நியூயார்க் நகரைப் போன்ற அரைகுறை இரும்பு தடுப்புகளால் தற்கொலைகளையோ அல்லது விபத்துகளையோ முழுமையாகத் தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முழுமையான கதவுகளை அமைக்க ஒரு நிலையத்திற்கு 44 முதல் 55 மில்லியன் டொலர்கள் வரை செலவாகும்.
எனவே, தற்காலிக தீர்வாக 2 மில்லியன் டொலர் செலவில் இந்த இரும்பு தடுப்புகளுடன், AI தொழில்நுட்ப கண்காணிப்பு கேமராக்களையும் இணைக்க TTC சபை திட்டமிட்டுள்ளது.
