கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாகாணத்தில், தனது இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
அன்று காலை, தனது தந்தை ரஷ்ய மொழியில் வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் குரல் பதிவு (Voice message) ஒன்றை அனுப்பியதாக கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபரின் மகள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
அதில், தனது தாய் தங்களின் “வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்” என்று தந்தை கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கம்லூப்ஸ் (Kamloops) நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விட்டாலி ஸ்டெபான்ஸ்கி (Vitali Stefanski) மீதான கொலை வழக்கு விசாரணையில், அவரது 18 வயது மகள் செலினா மார்ட்டின் (Selina Martin) கலந்துகொண்டு இந்த சாட்சியத்தை வழங்கினார்.
“நீயும் உனது தம்பியும் இனி தனியாக இருக்கப் போகிறீர்கள், ஒருவரை ஒருவர் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு ஒன்றாக இருங்கள்” என்று தந்தை அக்குரல் பதிவில் கூறியதாக அவர் மொழிபெயர்த்துக் கூறினார்.
44 வயதான தத்ஜானா ஸ்டெபான்ஸ்கி (Tatjana Stefanski), கடந்த 2024 ஏப்ரல் 14 அன்று காடு ஒன்றிற்கு அருகிலுள்ள வீதியில் குத்திக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
அவரது உடலில் 21 வெட்டுக் காயங்களும், நெஞ்சுப் பகுதியில் 7 குத்துக் காயங்களும் காணப்பட்டதாக அரசுத்தரப்பு சட்டத்தரணி தெரிவித்தார்.
விபத்து நடந்த இடத்திற்கு அருகே இரத்தக்கறை படிந்த கத்தி மற்றும் விட்டாலியின் கைவிடப்பட்ட கார் மீட்கப்பட்டது.
மேலும், காட்டில் இருந்து காலணிகள் இன்றி வெளியே வந்து பொலிஸாரிடம் கொலையை ஒப்புக்கொண்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், விட்டாலி ஸ்டெபான்ஸ்கி தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து, தான் குற்றவாளி இல்லை என வாதிட்டு வருகின்றார்.
