கடனாவில் கைக்குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்பு – இந்திய தம்பதி மீது குற்றச்சாட்டு!

கனடாவின் ஹாலிபாக்ஸ் (Halifax) நகரில் இரண்டு நாட்களாகத் தேடப்பட்டு வந்த, காணாமல் போன புதிதாகப் பிறந்த கைக்குழந்தையின் உடல் காடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இருவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு, பிரசவித்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் 23 வயதுப் பெண்ணொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதனையடுத்தே கைக்குழந்தைதை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தாலும், அவர் எந்தவொரு வன்முறையினாலும் பாதிக்கப்படவில்லை.

மாறாக மருத்துவ அவசரநிலை காரணமாகவே இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளது.

கிடைக்கப்பெற்ற புதிய தகவல்களின் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 3:20 மணியளவில் Prospect Road மற்றும் Old Coach Road பகுதிக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் இருந்து குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக அந்தப் பெண்ணின் உறவினரான சுக்ப்ரீத் சிங் (Sukhpreet Singh – 23) மற்றும் அவரது மனைவி ரமன்தீப் கவுர் (Ramandeep Kaur – 26) ஆகிய இருவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. 

அதன்படி, குழந்தையின் உடலை மறைத்தல், தடயங்களை அழித்தல் மற்றும் சடலத்தை அவமதித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவர்கள் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles