நியூயார்க் கட்டும் தளத்தில் வெடிவிபத்து – ஒருவர் பலி, 36 பேருக்கு காயம்!

அமெரிக்காவின் நியூயார்க் (New York) நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கப்பல் கட்டும் தளம் (Shipyard) ஒன்றில் வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்துகள் பதிவாகின.

அடுத்தடுத்து நிகழ்ந்த இரு சக்திவாய்ந்த வெடிவிபத்துகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், தீயணைப்பு வீரர்கள் உட்பட 36 பேர் காயமடைந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை மாலை 3:30 மணியளவில் கப்பல் தளத்தின் பின் பகுதியில் உள்ள உலோகக் கட்டட அடித்தளத்தில் தீப்பற்றியதாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.

மீட்புக்குழுவினர் விரைந்த சில நிமிடங்களிலேயே அடுத்தடுத்து இரண்டு வெடிப்புகள் (Explosions) நிகழ்ந்தன.

இந்த அதிர்வு அலைகளில் (Shock wave) சிக்கி சம்பவ இடத்திலேயே பொதுமக்கள் தரப்பில் ஒருவர் உயிரிழந்தார்.

சிக்கியிருந்தவர்களை மீட்க முயன்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் முதலுதவி மீட்பாளர்கள் உட்பட 36 பேர் காயமடைந்தனர்.

இதில் மண்டை ஓடு உடைந்த நிலையில் ஒரு தீயணைப்பு அதிகாரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani) மற்றும் தீயணைப்பு ஆணையர் லில்லியன் பொன்சிக்னோர் (Lillian Bonsignore) ஆகியோர் விபத்து இடத்தை நேரில் பார்வையிட்டனர்.

200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles