ஹட்சன்ஸ் பே நிறுவனத்தின் பழமையான ஓவியம் $217,250 டாலருக்கு ஏலம் போனது!

மர்மமான பின்னணியைக் கொண்ட பிரின்ஸ் ரூபர்ட் (Prince Rupert) என்பவரின் உருவப்பட ஓவியம் ஒன்று, டொராண்டோவில் நடைபெற்ற ஏலத்தில் $217,250 கனேடிய டாலருக்கு (சுமார் 300 மில்லியன் ரூபா) விற்பனையாகியுள்ளது.

கனடாவின் புகழ்பெற்ற ஹட்சன்ஸ் பே (Hudson’s Bay Co. – HBC) நிறுவனம் திவாலானதைத் தொடர்ந்து, அதன் வசமிருந்த 4,400 கலைப்பொருட்களை ஏலம் விடும் பொறுப்பு ஹெபெல் பைன் ஆர்ட் ஏல நிறுவனத்திடம் (Heffel Fine Art Auction House) ஒப்படைக்கப்பட்டது.

அவ்வாறு ஏலத்திற்கு வந்த 361 ஆண்டுகள் பழமையான இந்த ஓவியம், பல தசாப்தங்களாக ஆண்டனி வான் டைக் (Anthony van Dyck) என்ற ஓவியரின் உதவியாளர்களால் வரையப்பட்டதாகவே நம்பப்பட்டது.

கடந்த நவம்பரில் இந்த ஓவியத்தை ஏலம் விட ஹெபெல் நிறுவனம் தயாரானபோது, அதன் அசாத்தியமான நுணுக்கங்களைக் கண்டு வியந்து, இதன் பின்னணி குறித்து கனடா மற்றும் ஐரோப்பிய கலை வரலாற்று நிபுணர்களுடன் இணைந்து தீவிர ஆய்வை மேற்கொண்டது.

அந்த ஆய்வில், பல நூற்றாண்டுகள் பழமையான ஆவணங்களின் அடிப்படையில், இந்த ஓவியம் உண்மையில் டச்சு நாட்டின் புகழ்பெற்ற ஓவியரான பீட்டர் லெலி (Peter Lely) என்பவரால் வரையப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உண்மையான ஓவியர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, சில ஆயிரம் டாலர்கள் மட்டுமே மதிப்புடையதாகக் கருதப்பட்ட இந்த ஓவியத்தின் ஆரம்பகட்ட மதிப்பீடு $150,000 டாலராக உயர்ந்தது.

டொராண்டோவின் யோர்க்வில் (Yorkville) பகுதியில் நடைபெற்ற நேரடி ஏலத்தில், எதிர்பார்ப்புகளைத் தாண்டி இந்த ஓவியம் $217,250 டாலருக்கு (ஏலத்தொகை $180,000 + கூடுதல் கட்டணங்கள்) விற்பனையாகியுள்ளது.

எனினும், இதனை வாங்கியவரின் விபரங்களை ஏல நிறுவனம் வெளியிடவில்லை.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles