கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து அண்மையில் கனடாவின் Ontario மாகாணத்திற்குத் திரும்பிய நபர் ஒருவருக்கு எபோலா (Ebola) வைரஸ் தொற்று உள்ளதா என்பதற்கான மருத்துவப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக ஒண்டாரியோ சுகாதார அமைச்சு Ontario Ministry of Health தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், அவரின் பயணப் பின்னணியைக் கருத்தில் கொண்டும் இந்த எபோலா பரிசோதனை நடத்தப்படுவதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.
மாகாணத்தில் இதுவரை எபோலா தொற்று எவருக்கும் உறுதி செய்யப்படவில்லை என்றும் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
தற்போது Democratic Republic of Congo மற்றும் Uganda ஆகிய நாடுகளில் பரவி வரும் Bundibugyo எபோலா வைரஸ் காரணமாக 134 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த குறிப்பிட்ட வைரஸ் வகைக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் எதுவும் இல்லை என்பதால், உலக சுகாதார அமைப்பு (WHO) இதனைச் சர்வதேச அவசரநிலையாக அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு கனடா அரசு (Global Affairs Canada) தன் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
