உலகளாவிய விஞ்ஞானிகளின் சங்கமம் – மருத்துவ ஆய்வில் கனடா விடுத்த அதிரடி அழைப்பு!

அமெரிக்கா தனது ஆராய்ச்சி நிதியுதவிகளைக் குறைத்து வரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள சிறந்த விஞ்ஞானிகளைக் கவரும் நோக்கில் கனடா கனடா லீட்ஸ்‘ (Canada Leads) எனும் திட்டத்தின் மூலம் பாரிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

றொரண்டோவின் பல்கலைக்கழக சுகாதார வலையமைப்பு (University Health Network – UHN), உலகம் முழுவதிலுமிருந்து 100 இளம் மற்றும் நடுத்தர வயது விஞ்ஞானிகளைத் திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதுவரை 80 விஞ்ஞானிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சர்வதேச ஆராய்ச்சியாளர்களை ஈர்ப்பதற்காக மத்திய அரசு அடுத்த 12 ஆண்டுகளில் 1.7 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.

அமெரிக்காவின் தேசிய நிறுவனத்திலிருந்து தண்டுவட பாதிப்பு குறித்து ஆய்வு செய்யும் டாக்டர் ஏரியல் லெவின் (Dr. Ariel Levine) மற்றும் புற்றுநோய் உயிரணுக்கள் குறித்து ஆய்வு செய்ய இங்கிலாந்திலிருந்து வந்துள்ள டாக்டர் சோபி ட்விக்கர் (Dr. Sophie Twigger) ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் இணைந்துள்ளனர்.

ஏனைய நாடுகள் கல்வி சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் போது, கனடா அறிவியலில் முதலீடு செய்கிறது” எனத் தொழில் அமைச்சர் மெலனி ஜோலி (Melanie Joly) பெருமிதம் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய்க்கான புதிய சிகிச்சை முறைகள் மற்றும் நரம்பு மண்டலக் கட்டுப்பாடுகள் போன்ற உலகளாவிய ரீதியில் தாக்கம் செலுத்தக்கூடிய மருத்துவ ஆய்வுகளில் கனடாவைத் தலைவராக்குவதே இதன் இலக்காகும்.

திறமையான ஆராய்ச்சியாளர்களுக்குத் ரொறன்ரோ ஒரு காந்தமாக மாறி வருவதாகவும், இந்த விஞ்ஞானிகளின் ஒருங்கிணைந்த உழைப்பு நோயாளிகளின் சிகிச்சையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

Related Articles

Latest Articles