எல்னாஸ் ஹஜ்தாமிரி கடத்தல் வழக்கு – முகமது லிலோ மீதான கொலைக் குற்றச்சாட்டு வாபஸ் – 4 ஆண்டுகள் சிறை!

கனடாவின் வாசாகா பீச் (Wasaga Beach) பகுதியில் 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற எல்னாஸ் ஹஜ்தாமிரி (Elnaz Hajtamiri) கடத்தல் வழக்கில், முக்கிய குற்றவாளியான முகமது லிலோ (Mohamad Lilo) மீதான கொலைக் குற்றச்சாட்டு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

மேலும், அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

38 வயதான முகமது லிலோ (Mohamad Lilo), எல்னாஸைக் கடத்த சதி செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதற்காக அரசுத் தரப்பு அவர் மீதான கொலைக் குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்யச் சம்மதித்ததுடன், 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க நீதிபதி மிச்செல் பர்ஸ்ட் (Justice Michelle Furst) ஒப்புதல் அளித்தார்.

2022 ஜனவரியில், பொலிஸார் போல வேடமிட்ட மூவர் எல்னாஸைக் கடத்திச் சென்றனர்.

கடத்தப்பட்ட எல்னாஸ் இதுவரை உயிருடன் மீட்கப்படவில்லை; அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர்.

எல்னாஸ் தன்னைப் பிரிந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத லிலோ, அவரைப் பின்தொடர்ந்து துன்புறுத்திக் கும்பல் ஒன்றின் மூலம் கடத்தத் திட்டமிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

திருடப்பட்ட வாகனங்களை ஏற்றுமதி செய்யும் லிலோவின் சட்டவிரோதச் செயல்கள் எல்னாஸுக்குத் தெரியும் என்பதால், அவர் பொலிஸாரிடம் சென்றுவிடுவார் என்ற அச்சமும் இக்கடத்தலுக்கு ஒரு காரணமாக அமைந்தாக கூறப்படுகிறது.

லிலோவுக்கு எந்த இரக்கமும் இல்லை என்றும், அவர் ஒருபோதும் திருந்த மாட்டார் என்றும் எல்னாஸின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் கண்ணீருடன் தெரிவித்தனர்.

“நீ எல்னாஸைக் கட்டுப்படுத்த நினைத்தாய், ஆனால் அதில் தோல்வியடைந்தாய்” என அவர்கள் லிலோவைச் சாடினர்.

எல்னாஸ் மீது கடந்த காலத்தில் இரும்புக் கரண்டியால் (Frying pan) தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக, லிலோ ஏற்கனவே சிறையில் கழித்த காலத்தையே தண்டனையாகக் கொண்டு விடுவிக்கப்பட்டார்.

எல்னாஸின் 42வது பிறந்தநாளுக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles