றொரண்டோவில் விபத்து – லொறி மோதி பாதசாரி படுகாயம்!

றொரண்டோவின் (Toronto) கிழக்கு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை காலை 7:15 மணியளவில் குயின் ஸ்ட்ரீட் ஈஸ்ட் (Queen Street East) மற்றும் லோகன் அவென்யூ (Logan Avenue) சந்திப்பில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி ஒருவர் லொறி (Truck) மோதியதில் பலத்த காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவரின் நிலைமை உயிருக்கு ஆபத்தானது என மருத்துவ உதவியாளர்கள் (Paramedics) தெரிவித்துள்ள போதிலும், உயிருக்கு ஆபத்தான இல்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய லொரியின் சாரதி சம்பவ இடத்திலேயே தங்கியிருந்து பொலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.

Related Articles

Latest Articles