வான்கூவரில் புதிய மாற்றம் – 19 மாடிகளைக் கொண்ட பிரம்மாண்ட சமூக வீட்டுவசதி கோபுரம் அமைப்பு!

வான்கூவர் நகரில் 19 மாடிகளைக் கொண்ட புதிய சமூக வீட்டுவசதி கோபுரத்தை அமைக்க மாநகர சபை திட்டமிட்டுள்ளது.

வான்கூவர் நகரின் ஹேஸ்டிங்ஸ் பூங்காவிற்கு (Hastings Park) அருகில் அமைந்துள்ள பழைய ரமாடா ஹோட்டல் (Ramada Hotel) கட்டிடத்தை அகற்றிவிட்டு இந்த வீட்டு வசதி கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.

3475 ஈஸ்ட் ஹேஸ்டிங்ஸ் வீதியில் (3475 East Hastings St.) அமைந்துள்ள இந்த இடம், தற்போது ஸ்கீனா ஹவுஸ்‘ (Skeena House) என்ற பெயரில் பழங்குடியின மக்களுக்கான தற்காலிக தங்குமிடமாகச் செயற்பட்டு வருகிறது.

TKAD Architecture & Design நிறுவனத்துடன் இணைந்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தின்படி, இங்கு 176 சமூக வீடுகள் உருவாக்கப்படவுள்ளன.

இதில் ஒரு படுக்கையறை கொண்ட 90 வீடுகள், இரண்டு படுக்கையறைகள் கொண்ட 54 வீடுகள் மற்றும் மூன்று படுக்கையறைகள் கொண்ட 32 வீடுகள் அமையவுள்ளன.

மேலும், கட்டிடத்தின் தரைத்தளத்தில் சுமார் 6,500 சதுர அடி பரப்பளவில் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது, அப்பகுதியில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புதிய கட்டிடம் போக்குவரத்து வசதிகள் நிறைந்த பகுதியில் அமைவதால், பொதுமக்களின் பயணத் தேவைகளும் இலகுவாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles