பிராம்ப்டனில் பயங்கரம் – துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி! தப்பியோடியவர்களை தேடி பொலிஸார் வலைவீச்சு!

கனடாவின் பிராம்ப்டன் (Brampton) நகரில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு சுமார் 10:23 மணியளவில் ரூதர்போர்ட் வீதி (Rutherford Road) மற்றும் வேப்ரிட்ஜ் டிரெயில் (Weybridge Trail) சந்திப்பிற்கு அருகில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகப் பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police) தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் அவசர மருத்துவ உதவியாளர்களும் (Peel paramedics), துப்பாக்கிக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இருவரை மீட்டனர்.

எனினும், அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேக நபர் அல்லது நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்ட நிலையில், அவர்களைக் கைது செய்யப் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது அந்தப் பகுதி முழுமையாக பொலிஸாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாகப் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles