வான்கூவர் அக்குவாரியத்தில் புதிய மாற்றம் – நீருக்கு அடியில் கண்ணாடி குகைப்பாதை அமையவுள்ளது!

கனடாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வான்கூவர் அக்குவாரியம் (Vancouver Aquarium), தனது வெளிப்புறக் குளங்களை முழுமையாக நவீனமயமாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

அதன்படி, ஸ்டான்லி பூங்காவில் (Stanley Park) அமைந்துள்ள இந்த அக்குவாரியத்தில், குறிப்பாக கடல் சிங்கங்கள் (Sea lions) மற்றும் சீல் (Seals) மீன்கள் வாழும் பி.சி. வைல்ட் கோஸ்ட்‘ (B.C. Wild Coast) பகுதி முற்றிலும் புதிய பொலிவுடன் மாற்றப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் மிக முக்கிய அம்சமாக, நீருக்கு அடியில் மக்கள் நடந்து சென்று ரசிக்கும் வகையில் ஒரு கண்ணாடி குகைப்பாதை (Walk-through tunnel) அமைக்கப்படவுள்ளது.

இதன் மூலம் பார்வையாளர்கள் கடல்வாழ் பாலூட்டிகள் தங்களுக்கு மேலே நீந்துவதை மிக அருகில் இருந்து காண முடியும்.

மேலும், இப்பகுதி பி.சி. மீன்பிடி கிராமம் (B.C. fishing village) போன்ற கலைநயத்துடன் வடிவமைக்கப்படவுள்ளது.

வான்கூவர் பூங்கா சபை (Vancouver Park Board) இத்திட்டத்திற்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

சுமார் 70-வது ஆண்டை எட்டும் இந்த அக்குவாரியம், ஹேர்ஷெண்ட் பேமிலி என்டர்டெயின்மென்ட் (Herschend Family Entertainment) நிறுவனத்தின் முழுமையான தனியார் முதலீட்டில் இந்த மாற்றங்களைச் செய்யவுள்ளது.

இதற்கான கட்டுமானப் பணிகள் வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாகி, 2027-ஆம் ஆண்டின் இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles