டொராண்டோவில் பரபரப்பு – யூதர்களுக்குச் சொந்தமான உணவகம் மீது துப்பாக்கிச் சூடு!

கனடாவில் யூதர்களுக்குச் சொந்தமான உணவகம் ஒன்றின் மீது, வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

டொராண்டோவின் வடக்குப்பகுதியில் உள்ள அவென்யூ வீதி (Avenue Road) மற்றும் லாரன்ஸ் அவென்யூ வெஸ்ட் (Lawrence Avenue West) சந்திப்பிற்கு அருகில் அமைந்துள்ள உணவகத்தின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த உணவகத்தின் மீது துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன.

அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொராண்டோ பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இது ஒரு வெறுப்புணர்ச்சியால் தூண்டப்பட்ட குற்றமா (Hate Crime) என்ற கோணத்திலும் ஆராய்ந்து வருகின்றனர்.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், டொராண்டோவில் யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இலக்கு வைக்கப்படுவது அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளது.

இந்தப் புதிய தாக்குதல் குறித்து பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், பொதுமக்களிடம் இருந்து மேலதிக தகவல்களை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles