கஞ்சா நிறுவன முதலீட்டாளர்களுக்கு $8 மில்லியன் நஷ்டஈடு – ஒன்டாரியோ உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

கனடிய கஞ்சா நிறுவனத்தின் மீதான வழக்கில், 8 மில்லியன் டொலர் நஷ்டஈடு வழங்க ஒன்டாரியோ உயர் நீதிமன்றம் (Ontario Superior Court of Justice) மார்ச் 19 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

Maricann Group Corp நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட கூட்டு நடவடிக்கை வழக்கிலேயே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2017 டிசம்பர் 13 முதல் 2019 ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை, லேங்டன் (Langton, Ont.) பகுதியில் உள்ள தனது உற்பத்தி நிலைய விரிவாக்கத் திட்டங்கள் குறித்துத் தவறான தகவல்களை வழங்கி முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக அந்நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்து சந்தையிலிருந்து நீக்கப்பட்டன.

தற்போது எட்டப்பட்டுள்ள இந்த உடன்படிக்கையின்படி, குறிப்பிட்ட காலப்பகுதியில் பங்குகளை வாங்கி நஷ்டமடைந்த முதலீட்டாளர்கள் இழப்பீடு கோர முடியும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் Berger Montague சட்ட நிறுவனத்தின் இணையதளம் அல்லது nuvoclaims.com ஊடாகத் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57

Related Articles

Latest Articles